வடக்கு கிழக்கில் அதிக வெப்பமான காலநிலை எச்சரிக்கை!

0

வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் பெரும்பாலான பகுதிகளில் இன்றைய தினம் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதன் காரணமாகக் குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வெப்பமான வானிலையினால், அதிக களைப்பு உள்ளிட்ட உடலியலில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பதனால், போதுமான அளவு நீரை அருந்துமாறும், நிழலான இடங்களில் தரித்திருத்துக்குமாறு சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளதாகக் காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேநேரம், வீட்டிலுள்ள முதியோர்கள் மற்றும் நோயாளிகள் இந்த நிலைமை குறித்து அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும், சிறுவர்களை வாகனங்களுக்குத் தனியாக விட்டுச் செல்வது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

பொதுவெளிகளில் கடின உழைப்பில் ஈடுபடுவதும் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அந்த நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

தோல் தொடர்பான தொற்று நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளமையினால், வெப்பமான பகுதிகளில் வசிப்போர், சிறுவர்களுக்கு அதிக நீர் அருந்தக் கொடுப்பதுடன், வெப்பநிலைமைக்கு ஏற்றவாறான ஆடைகளை அணிவிக்க வேண்டும் என்றும் சிறுவர் விசேட மருத்துவ அதிகாரி தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.