வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்கு சுமந்திரன் கடும் எச்சரிக்கை!

0

வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஐனாதிபதியின் பிரதிநிதியாக ஜெனீவாவிற்குச் செல்வது தொடர்பில் தமிழ் மக்கள் விசனம் கொள்ளத் தேவையில்லை. ஐனாதிபதியின் முகவரான ஆளுநர் என்ன செய்வார் என்பதும் எமக்குத் தெரியும் என மிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் ஆளுநர் வடக்கு மக்களின் சார்பில் தான் செல்வதாகவும், இந்த மக்களின் கருத்தையே அங்கு வெளிப்படுத்தப் போவதாகவும் பேசக் கூடாது. அவ்வாறு அவர் பேசினால், நாங்கள் மாற்று நடவடிக்கைளை எடுக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யாழ் பிரதான வீதியிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை மதியம் நடைபெற்ற ஊடகவியியலாளர் சந்திப்பின் போது, வடக்கு ஆளுநர் ஜெனீவா சொல்லவுள்ளமை தொடர்பில் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலையே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் ,

ஐனாதிபதி நியமிக்கின்ற ஒருவர் அந்த அதிகாரங்களை உபயோகிக்க முடியாது.
ஆகவே வடக்கு ஆளுநர் அதனைச் செய்வதை நாங்கள் தடுக்க முடியாது. ஏனெனில் அவர் ஐனாதிபதியினுடைய முகவர். ஆனால் வடக்கு மக்கள் சார்பிலேதான் இதனை அதனைச் சொல்லுகின்றேன் என்று அவர் பேசக் கூடாது. அப்படியாக அவர் பேசுவாராக இருந்தால் மாற்று நடவடிக்கைகள் உடனடியாக நாங்கள் எடுக்க நேரிடும் என எச்சரிக்கை ஒன்றையும் சுமந்திரன் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.