வரவு செலவு திட்டம் 2019 சபையில் சமர்பிப்பு! விபரங்கள் உள்ளே!

0

2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று முற்பகல் இடம்பெற்றதுடன் இதன்போது வரவு செலவு திட்டத்திற்கு அமைச்சரவையின் அனுமதி வழங்கப்பட்டதாக உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று காலை 8.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமான இந்த கூட்டம் சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, மக்களை வலுவூட்டி வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களை வலுப்படுத்துவதற்காக அனைவரினதும் தேவைகளை நிறைவேற்றும் நோக்கிலான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு சமர்ப்பித்தார்.

இத போது இடம்பெற்ற விடயங்களின் ஒழுங்குகள் வருமாறு :

02:00 – பாரளுமன்ற சபை நடவடிக்கைகள் ஆரம்பம்.

02:04 – நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு ஆரம்பம்

02:07 – வரவு செலவுத் திட்டம் சமர்பிக்கப்படுவதற்கு முன்னர், நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் உரை ஆரம்பம்

02:22 – என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தை மேலும் விரிவுப்படுத்த நடவடிக்கை. இதன் மூலம் கடன் வசதிகளை வழங்க நடவடிக்கை

02:25 – சிறிய மற்றும் மத்திய தர வர்த்தகர்களை ஊக்குவிக்க நடவடிக்கை

02:28 – விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிக்க 250 பில்லியன் ஒதுக்கப்படும். அநுராதபுரம், குருநாகல், புத்தளம், இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் விவசாய நடவடிக்கை மேம்படுத்தப்படும்

02:30 – இறப்பர் உற்பத்திக்கு 800 மில்லியன் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், தெங்கு உற்பத்தியை அதிகரிக்கவும் தெங்கு உற்பத்தியில் ஈடுபடுவோரை ஊக்குவிக்கவும் நடவடிக்கை

02:31 – தேசிய இளைஞர் சேவைகள் சபையின் உறுதிப்படுத்தப்பட்ட பயனாளிகளிகளுக்கு என்டபிரைஸஸ் கடன் திட்டத்தை பெற்றுக்​கொடுக்கும் போது முக்கியதுவம் வழங்கப்படும். இதுவரை 60,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

02:32 – கறுவாப்பட்டையை ஏற்றுமதி செய்யும் வகையில், அத்தொழில் துறையை ஊக்குவிப்பதற்கு 75 மில்லியன் ரூபாய் ஒதுக்க நடவடிக்கை

02:33 – பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைத் தொடர்பில், தேயிலை சபையுடன் கலந்துரையாடி விரைவானத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

02:34 – மொரகஹா கந்த திட்டத்திற்கு 12000 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு

02:35 – மீன் ஏற்றுமதி மூலம் 209 மில்லியன் ரூபாய் இலாபம் வருவாய் கிடைக்கப்பெற்றுள்ளது.

02:38 – 100,000 க்கு மேற்பட்டோருக்கு கழிப்பறை வசதிகள் இல்லை. மொனராகலையில் மாத்திரம் 35,000 குடும்பங்களுக்கு கழிப்பறை வசதிகள் இல்லை. இந்த வருடம் சகலருக்கும் கழிப்பறை வசதிகளை அமைத்துக் கொடுக்கும் வகையில் 4 பில்லியன் ஒதுக்கீடு

02:40 – அதிவேக வீதி அபிவிருத்திக்கு 4000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

02:45 – நாட்டில் சகல பாடசாலை மாணவர்களுக்கும் ஒரு கோப்பை பால் இலவசமாக வழங்கப்படும்

02:45 – மொரகாகந்த, களுகங்கை திட்டங்களை அடுத்தாண்டு நிறைவு செய்ய எதிர்பார்ப்பு

02:46 – அங்கவீனமுற்றவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகையை 3,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாய் வரை அதிகரிக்க நடவடிக்கை

02:47 – சிறுநீரக நோயாளர்களுக்கு 1800 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

02:48 – சிறைச்சாலை திணைக்களத்துடன் இணைந்து போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டவர்களை அதிலிருந்து மீட்கும் வகையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்

02:50 – வடக்கு கிழக்கு ஆகிய பகுதிகளில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும். அத்துடன் அங்குள்ள மக்களுக்காக வீடமைப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க 24 பில்லியன் ஓதுக்கீடு

02:51- 25 வருடங்களில் செலுத்தக் கூடிய வகையில் 6 சதவீத வட்டி அடிப்படையிலான இலகுக் கடன் திட்டங்களை இளம் ஜோடிகளுக்கு வழங்க நடவடிக்கை

02:52 – வெளிநாட்டில் தொழில்புரிவொருக்கு “சிஹினமாலிகா” கடன் திட்டம் அறிமுகம் செய்யப்படும்.

02:53 – சிறைச்சாலைகளில் உள்ள பெரும்பாலானோர் போதைப்பொருளுடன் தொடர்புடையோர் ; அதற்கு எதிராக ஜனாதிபதி நடவடிக்கை.

02:55 – தனியார் நிறுவனங்களிலும் பிரசவ விடுமுறையை 3 மாத காலம் வழங்கும் வகையில் வழிவகைகளை செய்தல்.

02:58 – வடக்கில் முஸ்லிம்களை மீள் குடியமர்த்த நடவடிக்கை

03:05 – நவீன தொழில்நுட்ப வசதிகள் – குறிப்பாக இணையவழி ஹோட்டல் முன்பதிவு உள்ளிட்டவற்றை விரிவாக்கல் – அதனூடாக சுற்றுலாத்துறையை விரிவாக்கல்

03:08 – கல்வித் துறைக்கு 32 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

03:12 – இலங்கையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு உலகில் தலை சிறந்த பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைத் தொடர வாய்ப்பு

03:13 – நிபந்தனையுடன் வெளிநாட்டில் உயர்கல்வியை தொடர வாய்ப்பு. 10 வருடங்கள் இலங்கையில் தொழில்புரிய வேண்டும் என்பது கட்டாயம்..

03:14 – ருஹூணு பல்கலைக்கழகத்தில் வைத்தியபீடமொன்றை நிறுவ நடவடிக்கை

03:15 – தேசிய பூங்காக்களுக்கான அனுமதிச்சீட்டு பணம் 15 சதவீத்ததால் குறைப்பு – வெளிநாட்டு மாணவ சுற்றுலாப்பயணிகளுக்கு மாத்திரம்

03:16 – கம்பெரலிய வேலைத்திட்டத்தை வலுப்படுத்த 48,000 மில்லியன் ஒதுக்கீடு

03:18 – பாடசாலைகளின் அடிப்படை வசதிகளை அதிகரிக்க 32,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

தற்போதும் சபை அமர்வுகள் நடைபெற்று கொண்டு இருப்பதால் முழுமையான விபரத்துக்கு எம்முடன் இணைந்து இருங்கள்.

Leave A Reply

Your email address will not be published.