விஜயகாந்த் அண்ணனை நான் விமர்சிக்க மாட்டேன் ! அவர் நல்லவர் ! தேர்தல் பிரசாரத்தில் உருகிய உதயநிதி!

0

தேர்தல் பிரசாரத்தின் போது விஜயகாந்த் அண்ணனை நான் விமர்சிக்க மாட்டேன் என பிரபல நடிகர் உதயநிதி ஸ்டாலின் உருக்கமாக பேசியுள்ளார்.

தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் திகதி நடைபெற உள்ளது. இதற்காக இருபெரும் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக தங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தீவிரமான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கள்ளக்குறித்து மக்களவை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் கௌதமசிகாமணியை ஆதரித்து திமுக தலைவரின் மகனும், பிரபல நடிகருமான உதயநிதி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர் ஆளும் அதிமுக அரசு துவங்கி, தேசிய கட்சியான பாஜக வரை கடுமையாக விமர்சித்து கிண்டல் செய்தார். தமிழகத்தில் தற்போது மோடி எதிர்ப்பலை வீசிக்கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் அது மோடி எதிர்ப்பலை அல்ல.., ஸ்டாலின் அலை. 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெரும் என தெரிவித்தார்.

விஜயகாந்த் குறித்து பேசுகையில், விஜயகாந்த் அண்ணன் மீது நான் மதிப்பு மரியாதை வைத்துள்ளேன். அவர் நல்லவர். அவரை பற்றி நான் விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால் அதேசமயம் அவருடன் இருப்பவர்கள் செய்வது கேவலமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.