விஞ்ஞானம் விண்ணை தொட்ட பூமியில் பசியாற்றிக் கொள்ள மண்ணை உண்ணும் அவல நிலையில் மக்கள்!

0

மக்கள் பசியாற்றிக் கொள்ள, மண்ணை உண்ணும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

அமெரிக்கா கண்டத்திலுள்ள ஹைத்தி நாட்டு மக்களுக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஹைத்தியின் போர்ட் ஆப் பிரின்ஸ் நகரைச் சேர்ந்த லூயிசெனா ஜோசப் என்வர் தனது குடும்பத்துடன் சுடும் வெயிலில் அமர்ந்து, மண் பிசைந்து கொண்டிருப்பதார். எனினும் அது மண் பாண்டங்கள் செய்வதற்கல்ல, மண் கேக் செய்வதற்காக என குறிப்பிட்டுள்்ளார்.

அது என்ன மண் கேக்? காசு கொடுத்து அரிசியோ, பழங்களோ, காய்கறிகளோ, மாமிசமோ வாங்க முடியாத ஏழை மக்களின் புதிய வகை உணவுதான் மண் கேக்.

மண் கேக் உண்ணும் பரிதாப நிலை, லூயிசெனா ஜோசப்பிற்கு மட்டுமல்ல. ஹைத்தி நாட்டின் பெரும்பாலான ஏழை மக்களுக்கு தற்போதைய சூழலில் இதுதான் பிரதான, சுவையான உணவாக மாறியுள்ளது.

வீடுகளில் மட்டுமே கிடைத்த மண் கேக், தற்போது வீதிகள் மற்றும் சந்தைகளில் விற்பனைக்கும் வந்துவிட்டன.

இந்த உணவு வயிறு சம்மந்தமான சில நோய்களுக்கு தீர்வு தரும் என்று வைத்தியர்கள் தெரிவித்தனர். எனினம் அது ஆறுதலுக்கான செய்தியாகவே எண்ணத் தோன்றுகிறது.

ஹைத்தியில் 50 லட்சம் மக்கள், போதிய ஊட்டச்சத்து இல்லாமல் வாழ்வதாக, ஐ.நா.வின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.