வீழ்ச்சியை நோக்கி செல்லும் தமிழர் தாயகத்தின் கல்வி ! யார் காரணம் ?

0

வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர்தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் மோசமான நிலையினை மாணவர்கள் எட்டியுள்ளமை தெரியவந்துள்ளது.
வடக்கு கிழக்கு உள்ளிட்ட மாவட்டங்களில் குறிப்பாக முதல் பத்து இடங்களில் கூட தமிழ் மாணவர்கள் எவரும் இடம்பிடிக்காத நிலையில் கல்விபொதுதராதர சாதரணதர தேர்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதற்க யார் காரணம் வடக்கின் அபிவிருத்தி கல்வியில் வளர்ச்சி என்று மார்தட்டும் அரசியல் வாதிகளும் அரச அதிகாரிகளும் நாடளாவியரீதியில் இதன் பெறுபேற்றுடன் ஒப்பிடுகையில் குறிப்பாக புத்திஜீவிகள் அதிகம் கொண்ட கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து முதன்நிலையில் நிக்கும் யாழ்மாவட்டத்தில் 17 ஆயிரத்தி 495 மாணவர்கள் பரீட்சை எழுதியும் 6ஆயிரத்தி 337 மாணவர்கள் உயர்தர வகுப்பிற்கு செல்லவுள்ளார்கள் இதுதான் இன்று தமிழர்களின் நிலையா இந்த நிலைக்கு யார் காரணம்

குறிப்பாக கலாச்சார சீரழிவுகளுக்குள் யாழ்ப்பாணம் தள்ளப்பட்டுள்ளமையும் திட்டமிட்டு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்ற செயற்பாடுகள் நாளாந்தம் அதிகரித்து காணப்படுகின்றன இவற்றை எல்லாம் நோக்குவோமக இருந்தால் தமிழர்களின் கல்வி வளர்ச்சியினை திட்டமிட்டு நசுக்கும் செயற்பாடுகளாக காணக்கூடியதாக உள்ளது.

வடக்கு கிழக்கு மாவட்டங்களில் இன்றை மாவர்களின் நிலை என்ன அவர்கள் இவ்வாறான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என பலர் வினாவலாம் இதற்கான விடையினை தமிழர்கள் அனைவரும்தான் கண்டுபிடிக்கவேண்டும்.

மாவட்ட ரீதியாக வெளியிடப்பட்டுள்ள பெறுபேறுகளின் அடிப்படையில், சராசரி பெறுபேற்றை விட குறைந்தளவிலேயே வடக்கு கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களின் நிலையும் காணப்படுகிறது.

22,910 மாணவர்கள் தேர்வில் தோற்றிய அம்பாறை மாவட்டத்தில் இருந்து, 8163 மாணவர்களே உயர்தர வகுப்புக்குச் செல்வதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து, 17,126 மாணவர்கள் தேர்வில் தோற்றிய போதும், 6419 மாணவர்களே உயர்தர வகுப்புக்கு தகுதி பெற்றுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் இருந்து 14,291 மாணவர்கள், தேர்வில் தோற்றிய போதும், 4724 மாணவர்களே உயர்கல்விக்கான தகுதியைப் பெற்றுள்ளனர்.

17,495 மாணவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து தேர்வில் தோற்றியிருந்த போதும், 6337 பேரே, உயர்வகுப்புக்குச் செல்லவுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 4404 மாணவர்கள் தேர்வில் தோற்றியிருந்தனர். அவர்களில், 1434 பேர் உயர்கல்விக்கு தகுதி பெற்றுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் இருந்து 3638 மாணவர்கள் தேர்வில் தோற்றிய போதும், 1321 மாணவர்களே உயர்கல்வி கற்கும் வாய்ப்பை பெறவுள்ளனர்.

3494 மாணவர்கள் தேர்வில் தோற்றிய முல்லைத்தீவு மாவட்டத்தில், 1246 மாணவர்களே உயர்வகுப்புக்குச் செல்கின்றனர்.

வவுனியா மாவட்டத்தில் இருந்து 5143 மாவர்கள் தேர்வில் தோற்றியிருந்தனர். இவர்களில் 1129 பேர் மாத்திரமே உயர்கல்விக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

கபொத சாதாரண தர தேர்வில் இம்முறை – நாடளாவிய ரீதியாக சராசரியாக 71.66 வீதமான மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் 64.4 சதவீதமும், மட்டக்களப்பு மாவட்டத்தில், 62.51 சதவீதமும், திருகோணமலை மாவட்டத்தில், 53.17 சதவீதமும் மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

வடக்கு மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தில் 67.02 சதவீதமும், கிளிநொச்சி மாவட்டத்தில் 54.3 சதவீதமும், மன்னார் மாவட்டத்தில் 69.34 சதவீதமும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 60.4 சதவீதமும், வவுனியா மாவட்டத்தில் 68.28 சதவீதமும், மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாவட்ட ரீதியான தேர்ச்சி வீத அடிப்படையில் 25 மாவட்டங்களிலும், கடைசி இடத்தை திருகோணமலை மாவட்டமும், அதற்கு முந்திய 24 ஆவது இடத்தை கிளிநொச்சி மாவட்டமும் பெற்றுள்ளன.

தேசிய அளவிலான சராசரி தேர்ச்சி வீதத்தை விட (71.66), அதிகமான தேர்ச்சி வீதத்தை ஏனைய பகுதிகளில் உள்ள 8 மாவட்டங்கள் கொண்டிருக்கின்ற போதும், வடக்கு, கிழக்கின் 8 மாவட்டங்களும் சராசரி நிலையை விடக் கீழேயே இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.