அமெரிக்க புலனாய்வு பிரிவு இலங்கை வருகை! விசாரணைகளில் புதிய திருப்பம்!

0

கொழும்பில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து விசாரணைகளுக்காக அமெரிக்க புலனாய்வு பிரிவு இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவுஸ்திரேலியா மற்றும் சர்வதேச பொலிஸ் புலனாய்வு பிரிவின் அதிகாரிகளும் கொழும்பு வரவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

இதன்படி, அமெரிக்க புலனாய்வு பிரிவான FBI (Federal Bureau of Investigation) அதிகாரிகள் இன்று கொழும்பு வந்துள்ளதாகவும், அவர்கள் தமது உதவிக்கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சர்வதேச பொலிஸ் புலனாய்வு அதிகாரிகளும், அவுஸ்திரேலிய நாட்டு புலனாய்வு அதிகாரிகளும் நாளை கொழும்பு வரவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.