அரச நிருவாக சேவைப் பரீட்சைக்கான வயதெல்லையை அதிகரிக்குமாறு கோரிக்கை

0

அரச நிருவாக சேவை பரீட்சைக்கான வயதெல்லையை அதிகரிக்குமாறு களுத்துறை மாவட்ட மக்கள் விடுதலை முன்னணியின் பாாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு, பொது நிருவாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு என்பவற்றின் மீதான வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.

அரச நிருவாக சேவைப் பரீட்சைக்கான வயதெல்லை 28 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் ஏதேனும் பிரச்சினை காரணமாக தமது கல்வி நடவடிக்கைகளை முடிக்க முடியாமல்போன திறமையான மாணவர்கள் இப்பரீட்சைக்குத் தோற்றமுடியாத நிலை உருவாகின்றது. இதனால் இப்பரீட்சைக்கான வயதெல்லையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.