அலரி மாளிகையில் தற்கொலை செய்த அதிரடிப்படை வீரரின் தற்கொலைக்கான காரணம் வெளியானது !

0

அலரி மாளிகை வளாகத்தில் அதிரடிபடை வீரர் ஒருவர் , நேற்று காலை தற்கொலை செய்து கொண்டார்.

அவர் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

பேஸ்புக் மூலம், ஏற்பட்ட காதல் உறவு முடிவிற்கு வந்தமையால் ஏற்பட்ட விரக்தியடைந்த நிலையிலேயே தற்கொலை செய்துள்ளதாக விசாரணைகளிலிந்து தெரியவந்துள்ளது.

நேற்று காலை குறித்த அதிரடிபடை வீரர் தனது கடமைக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியில் தனக்குத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவ்வாறு தற்கொலை செய்துகொண்டர், வரக்காபொல பிரதேசத்தை சேர்ந்த 31 வயதான தில்ருக் சமரசிங்க என்பவராவார்.

இவர், முகப்புத்தகம் மூலம் அறிமுகமான காதலிக்கு எழுதிய கடிதம் ஒன்று உயிரிழந்த அதிரடிபடை வீரரின் உடமையிலிருந்து பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பிள்ளைகளின் தாயான இந்த பெண் சில காலங்களாக முகப்புத்தகம் ஊடாக இந்த அதிகாரியுடன் தொடர்பு ஒன்றை ஏற்படுத்தி கொண்டுள்ளார்.

எனினும் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக விரிசல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.