அலுகோசு பதவிக்கான நேர்முகப் பரீட்சையில் பட்டதாரி!

0

அலுகோசு பதவிக்கு நேற்று (02) நடைபெற்ற நேர்முகப் பரீட்சையில் பட்டதாரி ஒருவரும் கலந்துகொண்டுள்ளதாக சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது.

நேற்றைய நேர்முகப் பரீட்சைக்கு 39 விண்ணப்பதாரிகள் அழைக்கப்பட்டிருந்த போதிலும் 19 பேர் மாத்திரமே சமூகமளித்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.

இவ்வாறு வருகை தந்திருந்த சகலரும் க.பொ.த. சாதாரண தரம் மற்றும் க.பொ.த. உயர்தரம் சித்தியடைந்தவர்கள் எனவும் சிறைச்சாலைகள் உயர் அதிகாரியொருவர் கூறியுள்ளார்.

இந்தப் பதவிக்கான ஆகக் குறைந்த தகுதியாக க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 6 பாடங்கள் சித்தியடைந்திருத்தல் வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இன்று (03) நடைபெறவுள்ள நேர்முகப் பரீட்சைக்கு 40 விண்ணப்பதாரிகள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.