இந்தியாவில் அதிர்வை ஏற்படுத்திய கோர விபத்து! இரு பிரபலங்கள் பரிதாப பலி!

0

தெலுங்கு தொலைக்காட்சியின் பிரபல நடிகைகள் இருவர் ஒரேநேரத்தில் விபத்தில் பலியாகியுள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தில் நடந்த வீதி விபத்தில் ஒரே காரில் பயணம் செய்த இரண்டு தெலுங்கு நடிகைகள் பலியானது பொலிவூட் திரையுலகை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

படப்பிடிப்பு முடிந்து ஐதராபாத்தை நோக்கி பிரபல தெலுங்கு தொலைக்காட்சி நடிகைகள் அனுஷா ரெட்டி, பார்கவி ஆகிய இருவரும் சென்று கொண்டிருந்தனர். திடீரென எதிர்பாராத விதமாக கார், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் ஓரமாக நின்ற மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் நடிகை பார்கவி சம்பவ இடத்திலேயே பலியானார்.

படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நடிகை அனுஷா ரெட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் சாரதியும், நடிகைகளுடன் பயணம் செய்த இன்னொருவரும் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.