இந்தியாவில் 2000 க்கும் மேற்பட்ட மக்கள் தேர்தலுக்கு கறுப்பு கொடி ! சூடு பிடிக்கும் தேர்தல் களம்

0

இந்தியாவின் கிழக்கு பிகாரியிலுள்ள 2000க்கும் மேற்பட்ட மக்கள், தேர்தலை புறக்கணிப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.

பிகாரி, Dabil கிராமத்தில் வசிக்கும் மக்களே இவ்வாறு தேர்தலை புறக்கணிப்பதற்கு ஏகமனதாக தீர்மானித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் அம்மக்கள் தெரிவித்துள்ளதாவது, “எங்களது பகுதிகளுக்கு வாக்குகளை சேகரிப்பதற்காக வருகை தந்த அரசியல்வாதிகள், தங்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதனையும் இதுவரை நிறைவேற்றவில்லை.

மேலும் தங்களுக்கான அடிப்படை தேவைகளை கூட ஆட்சியாளர்கள் நிறைவேற்றி தரவில்லை.

இதேவேளை கிராமத்திலிருந்து நகரப்புரத்திலுள்ள பாடசாலை, வைத்தியசாலை ஆகியவற்றுக்கு செல்வதற்கான வீதியை புனரமைத்து தராதமையால் நாள்தோறும் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியேற்பட்டுள்ளது.

அந்தவகையில் எந்ததொரு அடிப்படை தேவைகளும் ஆட்சியாளர்களால், எங்களது கிராமத்தில் மேற்கொள்ளபடாதமையால் நடைபெறவுள்ள தேர்தலை புறக்கணிக்க தீர்மானித்துள்ளோம்” என அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.