இந்திய பாராளுமன்ற தேர்தல் நிலவரம் ! தமிழகத்தில் 52.02 சதவீத வாக்கு பதிவு

0

தமிழகத்தில் 38 மக்களவை தொகுதியிலும், புதுச்சேரி 1 மக்களவைத் தொகுதியிலும், மற்றும் 18 சட்டமன்ற தொகுதியிலும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

அவ்வகையில், மதியம் 3 மணி நிலைவரப்படி தமிழகத்தில் 52.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டமன்ற தொகுதிகளில் 55.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதிகபட்சமாக நாமக்கல் தொகுதியில் 61.47 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இடைத்தேர்தலில் ஓசூர் – 55.25 சதவீதம், திருவாரூர் – 52.63 சதவீதம், பரமக்குடி 45.49 சதவீதமும் பதிவாகியுள்ளது.

இதேபோல் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் 3 மணி நிலவரப்படி 57.7 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குப்பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்ட 305 இடங்களில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும், 525 விவிபேட் இயந்திரங்களும் மாற்றப்பட்டுள்ளதாக சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.

வாக்கு சதவீத விவரம்;

அரக்கோணம் – 51.5 %
கரூர் -58.18 %
நாமக்கல் – 61.47 %
திருச்சி – 57.40 %
திருப்பூர் – 56 %
சேலம் – 52 %
கோவை – 49.97 %
பொள்ளாச்சி – 53.83 %
கிருஷ்ணகிரி – 56.26 %
ஸ்ரீபெரும்புதூர் – 49.07 %
ஈரோடு – 54 %
விழுப்புரம் – 59.78 %
தென்காசி – 45.58 %
காஞ்சிபுரம் – 53.15 %
சிதம்பரம் – 55.68 %
தருமபுரி – 57.78 %
ராமநாதபுரம் – 47.42 %
கடலூர்-53 %

இதேவேளை, தமிழகத்தில் தற்போதுவரை வாக்களித்து விட்டு திரும்பிய 7 முதியவர்கள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.