இந்திய மக்களவை தேர்தல் ! 20 மாநிலங்களின் தேர்தல் பிரசாரம் நிறைவு !

0

மக்களவை தேர்தலில் முதற்கட்ட வாக்குபதிவு நடைபெறும் 20 மாநிலங்களில், இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணியுடன் அனைத்து பிரசார நடவடிக்கைகளும் நிறைவடையவுள்ளன.

மக்களவை தேர்தலுக்காக 20 மாநிலங்களில் முதற்கட்ட வாக்குபதிவுகள் நாளை மறுதினம் நடைபெறவுள்ளன.

அதற்கமைய அம்மாநிலங்களிலுள்ள 91 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குபதிவு நடைபெறவுள்ளது.

ஆந்திரா, அருணாச்சல், அசாம், பீகார் சட்டிஸ்கர் ஜம்மு காஷ்மீர், மாகாராஷ்டிரா, மணிபூர், மேகாலாயா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் வாக்கு பதிவுகள் இடம்பெறவுள்ளன.

மேலும் நாகாலாந்து, ஓடிசா, சிக்கிம் தெலுங்கானா, திரிபுரா, உத்ர பிரதேசம், உத்ரகாண்ட், மேற்கு வங்கம், அந்தமான் மற்றும் இலட்சத்தீவுகளில் வாக்களிப்பு நடைபெறவுள்ளது.

இந்த தொகுதிகளில் இன்று மாலை 5 மணியுடன் அனைத்து தேர்தல் பிரசார நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளன.

முதற்கட்ட தேர்தலின் போது ஆந்திரா, ஓடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கீம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளது. இதில் ஒடிசாவில் மட்டும் நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.

மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் எழு கட்டங்களாக நடைபெறவுள்ளமை குறிப்பிடதக்கது.

Leave A Reply

Your email address will not be published.