இம்மாத இறுதிக்குள் மாகாண சபைத் தேர்தல்! தவறினால் அடுத்த வருடமே!

0

வழமையான விகிதாசார முறையில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த ஐக்கிய தேசியக் கட்சி எந்த நேரத்திலும் தயாராகவே உள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

பழைய முறையில் நடத்துவதாக இருந்தாலும் சட்டத்தில் சிறிய திருத்தம் கொண்டுவந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவேண்டும். இது இலகுவான காரியமாகும். இம்மாத இறுதிக்குள் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படாது போனால் அடுத்த வருடத்திலேயே மாகாணசபை தேர்தலை நடத்தமுடியும்.

மாகாண சபைத் தேர்தலை புதிய முறையில்தான் நடத்த வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட சில கட்சிகள் பிடிவாதமாக இருந்தமையால் தான் உரிய காலத்தில் தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எந்த முறையிலாவது தேர்தலை நடாத்துமாறும் எந்த முறையில் நடாத்தினாலும் தேர்தலில் வெற்றி பெறுவோம் எனவும் மஹிந்த ராஜபக்ஸ தரப்பு ஆரம்பம் முதல் தெரிவித்தே வருகின்றது.

தேர்தலை நடாத்துமாறு அனைத்து தரப்பினரும் கோரி வருகின்ற போதிலும் தேர்தல் மட்டும் ஏன் நடைபெறாமல் இருக்கின்றது என்பது மட்டும் பொது மக்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது

Leave A Reply

Your email address will not be published.