இலங்கைக்கு அடித்தது அபாய மணி! வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம்…

0

நாட்டின் பெரும்பாலான இடங்களில் இன்று அதிக வெப்பத்துடன் கூடிய காலநிலை காணப்படும் என காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

இதனால் முதியோர் மற்றும் சிறுவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மேல், தெற்கு மாகாணங்களிலும், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் 32 இற்கும் 41 இற்கும் இடைப்பட்ட செல்சியஸ் வெப்பநிலை காணப்படும் எனவும் கூறியுள்ளது.

இந்த வெப்பநிலைக்கு ஈடுகொடுப்பதற்கு சகலரும் நீரை அதிகம் அருந்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களைக் கேட்டுள்ளது. 

அத்துடன், வீடுகளில் தங்கியுள்ள முதியோர், நோயாளர்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

பகல் வேளையில் வெளியில் நடமாடுவதை குறைத்துக் கொள்ளுமாறும், தரித்து நிற்கும் வாகனங்ளில் சிறுவர்களை அதிக நேரம் வைத்திருப்பதை தவிர்ந்து கொள்ளுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.