இலங்கையில் பாதுகாப்பு அதிகாரியை கடித்த நபர் ! நடந்தது என்ன ?

0

எல்பிட்டியில் நபரொருவர் பாதுகாப்பு அதிகாரியை கடித்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பிரதேச செயலகத்திற்குள் நுழைய முற்பட்ட நபர் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரியை கடித்துள்ளார்.

இன்று காலை மதுபோதையில் வந்த அந்த நபர் பலவந்தமாக பிரதேச செயலகத்திற்குள் நுழைய முற்பட்ட வேளை பாதுகாப்பு அதிகாரி அவரை தடுத்துள்ளார்.

இதன்போது அந்த நபர், பாதுகாப்பு அதிகாரியின் கையை கடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதில் காயமடைந்த பாதுகாப்பு அதிகாரி தற்போது எல்பிட்டிய மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.

சந்தேக நபர் இனங்காணப்படவில்லை எனவும், அவரை தேடி விசாரணைகள் இடம்பெறுவதாகவும் எல்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.