இலங்கையில் பேருந்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட மாணவி ! அதிர்ச்சி செய்தி

0

புத்தளத்தில் தனியார் பேருந்திற்குள் வைத்து பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனமடுவ – மஹாஉஸ்வௌ பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான திருமணமான பேருந்தின் நடத்துனரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக வகுப்பிற்காக ஆனமடுவ பிரதேசத்திற்கு சென்ற 15 வயதான பாடசாலை மாணவியே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர், மாணவியை ஏமாற்றி தான் சேவை செய்யும் பேருந்தில் அவரை தடுத்து வைத்து துஷ்பிரயோகம் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துஷ்பிரயோகத்திற்குள்ளான மாணவி இதுகுறித்து அவரின் தாயாரிடம் தெரியப்படுத்தியுள்ளார். இதற்கமைய மாணவியுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற தாய் செய்த முறைப்பாட்டிற்கமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துஷ்பிரயோகத்திற்குள்ளான மாணவி வைத்திய பரிசோதனைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.