இலங்கையை நெருங்கியது பேராபத்து; மக்களுக்கு அபாய எச்சரிக்கை!

0

சூரியனின் வடக்குத் திசை நோக்கிய தொடர்ச்சியான இயக்கம் காரணமாக தற்போதைய நாட்களில் இலங்கைக்கு நேரான சூரிய உச்சம் நிலவுகிறது.

இதனால் இலங்கையின் பெரும்பாலான இடங்களில் அதிகரித்த வெப்பநிலை தொடர்ந்தும் நிலவிவருகிறது.

இந்த சூரிய இயக்கத்தின் காரணமாக இந்த வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று (07ஆம் திகதி) நல்லுருவ, பெல்லப்பிட்டிய, போத்தலே, கஹவத்தை, கதுருகல்ல, கொங்கெட்டிய, ஹபெஸ்ஸ மற்றும் தொம்பகஹவெல ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.11 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் சூரியப் பாதிப்பிலிருந்து விலகியிருக்க உரிய நடவடிக்கையினை அவசரமாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தபட்டுள்ளனர்.

சூரியனின் நேரடியான கதிர்வீச்சுக்களால் பல்வேறு உடல் உபாதைகளைத் தோற்றுவிக்கக்கூடிய ஆபத்துக்கள் நேருமென்பதால் இந்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.