இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் பிணையில் விடுதலை !

0

பொரளையில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன நீதிமன்ற பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கடை நீதவான் நீதிமன்றில் இன்று (திங்கட்கிழமை) அவர் முன்னிலையாகியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீர பிணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக இரத்து செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.