இஸ்ரேல் ஜனாதிபதி தேர்தலில் 5-வது முறையாக பிரதமரானார் பெஞ்சமின் நேதன்யாகு !

0

இஸ்ரேலில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று பெஞ்சமின் நேதன்யாகு 5-வது முறையாக மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இஸ்ரேல் நாட்டில் ‘கென்னெசெட்’ என்றழைக்கப்படும் 120 இருக்கைகள் கொண்ட பாராளுமன்றத்திற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.இதில், தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றியை பதிவு செய்துள்ளது.

இதன் அடிப்படையில் பிரதமராக 4 முறை பதவி வகித்துள்ள பெஞ்சமின் நேதன்யாகு, இந்த முறையும் வெற்றிபெற்று ஐந்தாவது முறையாக அரியணை ஏறுவதில் தீவிர ஆர்வம் காட்டியுள்ளார்.

பெஞ்சமின் நேதன்யாகு 13 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்த காலத்தில் இஸ்ரேல் நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க துணிச்சலான சில முடிவுகளை எடுத்தார்.

மேலும் அண்டைநாடான ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தலை திறம்பட எதிர்த்து சமாளித்தவர் என்ற வகையில் 69 வயதுடைய பெஞ்சமின் நேதன்யாகு மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.