உயிரிழப்பு 310 ஆக அதிகரிப்பு

0

இலங்கையில் எட்டு இடங்களில் கடந்த 21 ஆம் திகதி காலை முதல் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் இன்று காலை அவர் மேலும் குறிப்பிட்டார்.

சம்பவங்களில் இதுவரை வெளிநாட்டவர்கள் 45 பேர் உயிரிழந்துள்ளனர். 17 வெளிநாட்டவர்கள் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 31 வெளிநாட்டவர்களின் சடலங்கள் இனம்காணப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தீவிரவாத தாக்குதல் தொடர்பில் இதுவரை 28 பேர் கைது சந்தேகத்தின் பேரில் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர். 

Leave A Reply

Your email address will not be published.