உலகின் மிகப் பிரமாண்டமான மேடையில் ஈழத்தமிர்கள்!! பெருமிதத்தில் உலகத் தமிழர்கள்!!

0

கனடா டொரன்டோவில் அமைந்துள்ள 2019 Scotiabank Arena (Air Canada Centre) மேடை என்பது உலகின் பல முன்னணி கலை யாம்பவான்கள் நிகழ்ச்சிகளை நடாத்தும் ஒரு அரங்கு.

தமிழரது ஒரு சில நிகழ்வுகள் இவ் மண்டபத்தில் நடைபெற்றிருந்தாலும் அதில் புலம்பெயர் தமிழர்கள் பார்வையாளர்களாகத்தான் போயிருக்கின்றார்களே அன்றி, அந்த மேடையில் ஈழத்தமிழ் தலைஞர்கள் ஏறிய சந்தர்பம் என்பது அரிதிலும் அரிது.

ஈழத் தமிழ் கலைஞர்களின் ஒரு கனவு மேடையாக காலாகாலமாகக் காட்சி தந்துகொண்டிருக்கின்றதும்,பல ஆயிரம் சர்வதேச கலை யாம்பவான்கள் ஏறியதுமான அந்த மேடையில், முதன் முதலாக எமது கலைஞர்களும் ஏறப்போகின்றார்கள் என்பது, எமது கலைஞர்களுக்கும்அதை நேசிப்பவர்களுக்கும் ஒரு மகிழ்வான, எமது கலைஞர்களை மேலும் ஊக்கப்படுத்தும் தருணம்.

உலகெல்லாம் பரந்திருக்கும் எம்மவரின் தனித்துவமான கலைத்திறனை அடையாளம் கண்டு, அங்கீகரித்து, ஊக்கப்படுத்தி, சர்வதேச அரங்கில் நட்சத்திரங்களாக மிளிரச்செய்யும் நோக்குடன் 1000 எமது தமிழ் கலைஞர்களை ஒரே மேடையில் ஏற்றி தமிழையும், தமிழின் பெருமையையும்தமிழரின் கலைகளையும் அடுத்த தலைமுறையினரை நோக்கி நகர்த்தும் ஒரு முயற்சியாக ‘ IBC தமிழா – டொரன்டோ 2019’ வடிவமைக்கப்பட்டு கடந்த பலமாதங்களாக நிகழ்வு ஏற்ப்பாடுகள் பிரமாண்டமாக நடந்தேறிவருகின்றது.

இவ் ‘IBCதமிழா – டொரன்டோ 2019’ நிகழ்ச்சியின் நுழைவுச்சீட்டு வெளியிடும் நிகழ்வு (Ticket Launch), மற்றும் நிகழ்வுக்கு ஆதரவு வழங்குவோரையும் கௌரவிக்கும் நிகழ்வொன்று (April 18, 2019) JC’sமண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

நிகழ்வின் நுழைவுசீட்டுகளை “ticketmaster.ca” என்ற இணையதளத்திலும், தமிழ் வர்த்தக நிலையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.

Leave A Reply

Your email address will not be published.