உலகிலேயே மிகவும் குள்ளமான பெண் நாக்பூரில் தனது வாக்கினை பதிவு செய்தார் ! படம் உள்ளே

0

உலகின் மிகவும் குள்ளமான பெண் என்ற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரரான நாக்பூரைச் சேர்ந்த ஜோதி அம்கே இன்று வாக்களித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரைச் சேர்ந்தவர் ஜோதி அம்கே. இவரின் உயரம் 63 செ.மீதான். அதாவது, 2 அடி ஒரு இஞ்ச் உயரம் கொண்ட ஜோதி அம்கே கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

பல்வேறு திரைப்படங்கள், அமெரிக்க, இத்தாலி தொலைக்காட்சி நாடகங்களில் ஜோதி அம்கே நடித்துள்ளார்.

புனேயிலுள்ள லோனாவாலா பகுதியில் புகழ்பெற்றவர்களுக்காக வைக்கப்பட்ட மெழுகுச் சிலையில், ஜோதிக்காகவும் சிலை வைக்கப்பட்டுள்ளது.

இன்று 18 மாநிலங்கள், 2 யூனியன் பிரேதசங்களில் உள்ள 91 மக்களவைத் தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

இதில் நாக்பூரைச் சேர்ந்த ஜோதி அம்கே தனது பெற்றோருடன் காலையில் வாக்குப்பதிவு மையத்துக்கு வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.

25 வயதான ஜோதி அம்கே, தனது பெற்றோர், குடும்ப உறுப்பினர்களுடன் நாக்பூரில் ஒரு பள்ளியிலுள்ள வாக்குப்பதிவு மையத்துக்கு இன்று காலை சென்று வாக்களித்தார்.

Leave A Reply

Your email address will not be published.