எங்களுக்கு இன்னும் எச்சரிக்கை மணி அடிக்கவில்லை ! ரஹானே தெரிவிப்பு

0

எங்களுக்கு இன்னும் எச்சரிக்கை மணி அடிக்கவில்லை என ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவர் அஜிங்கிய ரஹானே தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். தொடரில் முதல் சம்பியன் பட்டத்தை வென்ற பெருமைக்குரிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, நடப்பு தொடரில் மோசமான தோல்விகளை தழுவி வருகின்றது.

அணியில் ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஸ்டீவ் ஸ்மித், சஞ்சு சம்சன், ஆஷ்டன் டர்னர், ஒசேன் தோமஸ், ஜோப்ரா ஆர்சர், ஆகியோர் உள்ளனர்.

எனினும், அவர்களின் சரியான திட்டமிடல் இல்லாததால் அணி தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து வருகின்றது.

இது குறித்து அணியின் தலைவர் அஜிங்கிய ரஹானே கூறுகையில், ”எங்களுக்கு இன்னும் எச்சரிக்கை மணி அடிக்கவில்லை என்றே நினைக்கிறேன். நாங்கள் ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ளோம். ஒரு போட்டியில் மட்டுமே மோசமாக தோல்வியடைந்துள்ளோம். மற்ற நான்கு போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தினோம். அவற்றில் மூன்றில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

தொடர்ந்து தோல்விகளை சந்தித்துக் கொண்டிருக்கும்போது முன்னேற்றத்திற்கான வழிகளைத் தேடுவது கடினமானதாகிவிடும். ஆனால் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும்போது, நீங்கள் அதிக அளவில் யோசிக்க வேண்டியதில்லை. எங்கள் வீரர்கள் அவர்களுடைய சிறப்பாக செயல்பாட்டை வெளிப்படுத்தினால், மகிழ்ச்சியான முடிவு வந்து சேரும்” என கூறினார்.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ளது. ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. இறுதி நான்கு போட்டிகளில் தோல்வியை சந்துள்ளது. இதன்படி அந்த அணி இரண்டு புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில், ஏழாவது இடத்தில் உள்ளது.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி எதிர்வரும் 11ஆம் திகதி, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இப்போட்டியில் அந்த அணி கட்டாய வெற்றியை நோக்கி அடியெடுத்து வைக்கவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே நடப்பு தொடரில் பிளே ஓஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைக்க முடியும்.

எனவே வாழ்வா சாவா என்ற நிலையில் களமிங்கும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, தங்களது இரசிகர்களுக்கு எவ்வாறானதொரு முடிவவை கொடுக்க இருக்கின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave A Reply

Your email address will not be published.