எதிர்வரும் 9ஆம் திகதி இலங்கைக்கு வரவிருக்கும் பாரிய நெருக்கடி! இன்றிலிருந்து தாயாராகவிருங்கள்!

0

இலங்கை தொடருந்து தொழிற்சங்கம் எதிர்வரும் ஒன்பதாம் திகதி நள்ளிவு முதல் இரு தினங்களுக்கு வேலைநிறுத்த போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரியவருகிறது.

இந்த வேலை நிறுத்த போராட்டமானது சம்பள பிரச்சினையை முன்வைத்து மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரியவருகிறது. குறித்த போராட்டத்தில் தொடருந்து நிலைய அதிபர்கள், சாரதிகள், காவலர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் தொடருந்து கண்காணிப்பு முகாமையாளர்கள் உள்ளிட்டோர் இணையவுள்ளனர்.

இந்த விடயத்தை தொடருந்து சாரதிகள் சங்க செயலாளர் இந்தக தொடங்கொட தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 13 மற்றும் 14ஆம் திகதி தமிழ், சிங்கள மக்கள் சித்திரை புத்தாண்டை கொண்டாடவுள்ளனர். எனவே இந்த வேலை நிறுத்த போராட்டமானது போக்குவரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் தொழில் நிமித்தம் வேறு மாவட்டங்களில் வேலை நிமித்தம் வசிக்கும் மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தமது சொந்த இடத்திற்கு செல்வார்கள்.

அவர்களில் பெரும்பாலானோர் தொடருந்திலேயே தமது பயணத்தை மேற்கொள்கிறார்கள். அத்துடன் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளைய தினம் விடுமுறை வழங்கப்படவுள்ள நிலையில் சுற்றுலா அல்லது சொந்த இடங்களுக்கு செல்வதற்காகவோ தொடருந்தில் பயணிக்கும் மக்கள் அனைவரும் இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக பாரிய நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என சமூகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.