ஐபிஎல் விதியை மீறி நடுவரிடம் சண்டையிட்ட டோனிக்கு அபராதம் !

0

ஐபிஎல் விதியை மீறி நடுவரிடம் சண்டையிட்ட சென்னை அணியின் கேப்டன் டோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இடையேயான போட்டியின் போதே இந்த சண்டனை நடைப்பெற்றுள்ளது.

ராஜஸ்தான் அணிக்கெதிராக நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் கடைசி ஓவரின் போது, 3 பந்துகளில் 8 ரன்கள் எடுத்தால் சென்னை அணி வெற்றி பெறலாம் என இருந்தது.

ஆனால் அப்போது வீசப்பட்ட பந்து நோ பால் என ஒரு நடுவரும், மற்றொரு நடுவர் இல்லை எனவும் கூறியதால் மைதானத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த டோனி, ஆடுகளத்திற்குள் சென்று நடுவர்களிடம் கடும் வாக்குவத்தில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் ஐபிஎல் விதியை மீறி ஆடுகளத்திற்குள் டோனி சென்றார்.

இதனால் அவருடைய ஆட்டத்திற்கான சம்பள பணத்திலிருந்து 50 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்படுகிறது என ஐபிஎல் நிர்வாகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.