ஐரோப்பிய நாடொன்றில் இறந்தும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஈழத்தமிழ் சிறுவன்?; நெகிழ்ச்சியில் வெளிநாட்டவர்கள்!

0

ஈழத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் பின்லாந்து நாட்டில் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது ஒரு நெகிழ்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் மேலும்,

மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த குணசேகரம் (குணம் மாஸ்ரர்) என்ற அழைக்கப்படும் ஆங்கில ஆசிரியர் புலம்பெயர்ந்து அவரது குடும்பத்தினருடன் பின்லாந்தில் வசித்து வந்த நிலையில்

அவரின் மகன் குணசேகரம் லோகபாலா என்ற சிறுவன் , கடந்த 27.03.2019 அன்று குடும்பமாக வாகனத்தில் சென்றபோது விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மூளைச்சாவு அடைந்த சிறுவன் பின்னர் கடந்த வியாழக்கிழமை காலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்தருணத்திலும் குறித்த சிறுவனின் இருதயம் உள்ளிட்ட உடல் பாகங்கள் தானம் செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னொருவர் உயிர் மூலம் அவர் இந்த உலகில் வாழ்ந்துகொண்டிருப்பர் என உறவினர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

குறித்த உடல் பாகங்கள் தானம் செய்யப்பட்ட சிறுவனின் புகைப்படங்களை அந்நாட்டு மக்கள் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.