கட்சி பார்த்து வாக்களிக்காதீர்கள்: நடிகை கஸ்தூரி ட்வீட்!

0

நாளை தமிழகம் மற்றும் புதுவை உள்ளிட்ட 40 மக்களவை தொகுதிகளுக்கும், 18 சட்ட பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழக அளவில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியும் தேர்தலுக்காக பல்வேறு வாக்குறுதிகளை அளித்து தமது பிரச்சார பயணத்தை நிறைவு செய்துள்ளன.

இந்த நிலையில், நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் தேர்தல் தொடர்பாக கருத்து ஒன்றினை பதிவு செய்துள்ளார். அதில், கட்சிகளை பார்த்து வாக்களிக்காதீர்கள் ; நல்ல வேட்பாளர்களை பார்த்து வாக்களியுங்கள் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சமூக வலைத்தளங்களை அதிகப்படியாக பயன்படும் கஸ்தூரி, அவ்வப்போது வெளியிட்ட கருத்துக்களின் காரணமாக சர்ச்சைகளில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.