கருணாநிதியை வீட்டுச் சிறைக்குள் அடைத்து வைத்த ஸ்டாலின்! தமிழக முதல்வர் பரபரப்புக் குற்றச்சாட்டு !

0

உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்காமல் இரண்டு ஆண்டுகள் கருணாநிதியை வீட்டுச் சிறைக்குள் அடைத்து வைத்தவர் தான் ஸ்டாலின் எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீலகிரியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து இன்று(08) குன்னூர், உதகை ஆகிய பகுதிகளில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது தேர்தல் கூட்டத்தில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

கருணாநிதி நலமாகவிருந்தால் தான் தலைவராக முடியாது என்பதை உணர்ந்து அவருக்கு உரிய சிகிச்சைகள் வழங்காமல் இரண்டு ஆண்டுகள் வரை வீட்டுச் சிறையில் அடைத்து வைத்துள்ளார்.

கருணாநிதியை வெளிநாட்டுக்கு அழைத்து சென்றிருந்தால் அவர் குணமடைந்திருப்பார். ஆனால், ஸ்டாலின் அதை செய்ய விரும்பவில்லை. திமுக-வில் தலைவர் பதவியை பிடிக்கும் நோக்கில் மட்டுமே அவர் இருந்தார்.

இதேவேளை, முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில் கருணாநிதிக்கு அளிக்கப்பட்ட மருத்துவச் சிகிச்சைகள் தொடர்பாக உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.