காணமல்போனோர் பட்டியலில் புதிய அரசியல் அமைப்பு ! அமைச்சர் மனோ கணேசன்

0

புதிய அரசியல் அமைப்பு வரைபு தற்போது காணமல்போனோர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறினார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், புதிய அரசியல் யாப்பு காணாமல்போயுள்ளமை குறித்து ஓ.எம்.பி. அலுவலகத்தில் முறையிட முடியும் எனவும் கூறினார்.

இந்த அரசாங்கத்தை தமிழ் மக்கள் அமைத்ததன் நோக்கம் புதிய அரசியல் அமைப்பு வேண்டுமென்பதற்காகவே என தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன், புதிய அரசியலமைப்பு வராமைக்கு அரசாங்கம் மாத்திரம் காரணம் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியல் அமைப்பு வரைபு ஆதிகாரப்பூர்வமாகக் கைவிடப்படவில்லை என்றும் ஆனால், அதன் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.