காலிமுகத்திடலில் 18 மாடி கட்டிடத்திலிருந்து வீழ்ந்த நபர் பலி!

0

கொழும்பு, காலிமுகத்திடலில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 18 மாடி ஹோட்டல் ஒன்றிலிருந்து நபர் ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.

நேற்று (08) மாலை 4.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதில் நிர்மாணப்பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

22 வயதுடைய மீகஹதென்னவைச் சேர்ந்த ஊரல லியனகே திரிசால் குணசிங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளா். இவரது சடலம் தற்பொழுது கொழும்பு தேசிய வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மரண பரிசோதணை இன்று (09) இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.