கீர்த்தி சுரேஷ் மற்றும் முக்கிய நடிகருக்கு கிடைத்த பிரம்மாண்ட விருது! எல்லோரும் எதிர்பார்த்த தருணம்

0

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது மரக்கார் அரபிக்கடலிண்டே சிம்ஹம் என்ற படத்தில் நடித்து வருகிறார். கடந்த வருடம் விஜய்க்கு ஜோடியாக சர்க்கார் படத்தில் நடித்திருந்தார். மேலும் விக்ரமுடன் சாமி 2, விஷாலுடன் சண்டகோழி 2, சூர்யாவுடன் தானா சேந்த கூட்டம், மகாநடி என பல படங்களில் நடித்திருந்தார்.

இதில் மகாநடி படம் தெலுங்கில் அவரின் பெரும் புகழை பெற்று தந்தது. படம் ஹிட்டாகி நல்ல கலெக்சன் கண்டது. மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான இப்படம் தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் வந்தது.

இதே போல ராம்சரண், சமந்தா நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் படமும் ஹிட்டானது. 2018 ல் வெளியான படங்களுக்காக தேசிய விருது விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. எல்லோரும் எதிர்பார்த்திருக்கும் இந்த நேரத்தில் Short list லீக்காகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் இந்த இரு படங்களும் தேசிய 2018 க்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெலுங்கு வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.