குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை

0

குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அம்பத்தளே சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படும் கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களில் எதிர்வரும் மே மாதம் வரையில் தடங்கலின்றி நீரை விநியோகிக்க முடியும் என அம்பத்தளே சுத்திகரிப்பு நிலைய மேலதிகாரி பியல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

களுகங்கையின் நீர்மட்டம் கணிசமான அளவு குறைந்துள்ளது. இதன் காரணமாக உவர் நீர் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுப்பதற்காக மண்மூடைகள் மூலம் அணைகள் அமைக்கப்படுகின்றன. தாழ் நிலப் பிரதேசங்களில் குடிநீர் விநியோகம் முறையாக இடம்பெற்றாலும் உயரமான இடங்களுக்கு நீரை விநியோகிப்பதில் பிரச்சினைகள் உள்ளன. ஆனாலும், கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் நீர்வெட்டு அமுலாக்கப்பட மாட்டாது என பியல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

களுகங்கையிலிருந்து நீர்விநியோகிக்கப்படும் பிரதேசங்களில் பிரச்சினையில்லை என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தெற்கிற்குப் பொறுப்பான பிரதிப் பொது முகாமையாளர் கிரிஷான் பெர்னாண்டோ குறிப்பிட்டார். களுகங்கையின் தாழ்நிலப் பிரதேசங்களில் நேற்று முன்தினம் தொடக்கம் கடல் நீர் கலக்கிறது. இதன் காரணமாக சில இடங்களில் பௌசர்கள் மூலம் நீரை விநியோகித்து வருவதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் முகாமையாளர் பியல் ராஜபக்ஷ கூறினார்

Leave A Reply

Your email address will not be published.