கோட்டாபய ஜனாதிபதி வேட்பாளராக வந்தால் எதிர்ப்பேன்! எழுந்துள்ள புதிய சிக்கல்!

0

மக்கள் எப்போதும் சரியான தீர்மானத்தை எடுப்பதாக கூற முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜேமுனி சொய்ஸா தெரிவித்தார்.

மக்கள் சரியான தீர்ப்பை எடுப்பதாயின் புத்த பெருமான் பிறந்த இந்தியாவில் பௌத்தர்கள் அதிகமானவர்களாக இருந்திருக்க வேண்டும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்னார்.

தனியார் தொலைக்காட்சியொன்றில் நேருக்கு நேர் கருத்துப் பரிமாறல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

ராஜபக்ஸாக்கள் வருவதற்கு நீங்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்ற போதிலும், நாட்டிலுள்ள மக்கள் ராஜபக்ஸாக்களையே கோருகின்றனர் என நிகழ்ச்சி நடாத்துனர் எழுப்பிய வினாவுக்குப் பதிலளிக்கையிலேயே சொய்ஸா எம்.பி. இவ்வாறு பதிலளித்தார்.

கோட்டாபய ராஜபக்ஸ வேட்பாளராக வருவதற்கு நான் எதிரானவன். நான் எதனையும் நேரடியாக பேசுபவன். நிலத்தில் அமர்வதற்கும், உண்மை பேசுவதற்கும் பயப்படத் தேவையில்லையெனவும் அவர் மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.