கோட்டாபய மீதான அமெரிக்க மனு ஜனாதிபதி கனவை பாதிக்குமா?

0

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்காவில் இருவேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்கவும், சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்ட தமிழர் ஒருவரும் இந்த இரண்டு வழக்குகளையும் தாக்கல் செய்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

கலிபோர்னியாவில் உள்ள பிரபல வர்த்தக நிலையமொன்றுக்குச் சென்றிருந்த கோட்டாபயவைத் தேடிச்சென்று இந்த மனு தொடர்பான நீதிமன்ற அழைப்பாணை கையளிக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க பிரஜாவுரிமை பெற்றுள்ள ஒருவர் மீது இவ்வாறு வழக்குத் தொடர்வது, ஜனாதிபதித் தேர்தலில் ஒருவர் போட்டியிடுவதற்கு எந்தவிதத்திலும் தடையாக அமையாது என அல்ஜெஸீரா ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.