சடலங்கள் நல்லடக்கம் ! கண்ணீரில் மூழ்கிய மட்டக்களப்பு !

0

மஹியங்கனையில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த 10பேரின் சடலங்களும் ஆயிரக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தியில் நல்லடக்கம் செய்யப்பட்டன.

மட்டக்களப்பு கள்ளியங்காடு மற்றும் தன்னாமுனை பொதுமயானத்தில் இன்று (வியாழக்கிழமை) மாலை அவர்களது சடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன.

மஹியங்கனையில் நேற்று இடம்பெற்ற விபத்தில் மூன்று பெண்கள், மூன்று குழந்தைகள் உட்பட 10பேர் உயிரிழந்திருந்தனர்.

இவர்களின் சடலங்கள் இன்று காலை மட்டக்களப்பு மாமாங்கம், டச்பார், சின்ன உப்போடை ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தன.

அதன்பின்னர் விபத்தில் சடலங்கள் மட்டக்களப்பு புளியங்குடா புனித செபஸ்தியார் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டு இறுதி அஞ்சலி வழிபாடுகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் அஞ்சலி வழிபாடுகள் இடம்பெற்றன.

இதன்போது ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தியதுடன் வழிபாடுகளைத் தொடர்ந்து ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு ஆறு பேரின் சடலங்கள் மட்டக்களப்பு கள்ளியங்காடு கிறிஸ்தவ மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டன.

டச்பார் பிரதேசத்தினைச் சேர்ந்தவர்களின் சடலங்கள் தன்னாமுனை பொது மயானத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு இடம்பெற்ற தேவ ஆராதனைகளைத் தொடர்ந்து நல்லடக்கம் செய்யப்பட்டன.

இதன்போது ஆயிரக்கணக்கானோர் திரண்டுவந்து அஞ்சலி செலுத்தியதுடன் பல்வேறு இடங்களிலும் நினைவு பதாதைகளும் தொங்கவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.