சூடான் ஆர்ப்பாட்ட போராட்டத்தில் கலவரம் ! பதற்றத்தில் மக்கள்

0

சூடானில் அந்நாட்டு ஜனாதிபதிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் சிலர் காயமடைந்துள்ளனர்.

பொருளாதார சீர்கேடு மற்றும் ஊழலுக்கு எதிராக சூடானின் கார்டூம் பகுதியில் நேற்று(திங்கட்கிழமை) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், சூடான் ஜனாதிபதி உமர் அல் பஷீர் பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்புகைக் குண்டுத்தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் 50 இற்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில் சூடானின் பல பகுதிகளிலும் இராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.