ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாரா ?மௌனம் கலைத்தார் சங்கக்கார !

0

ஜனாதிபதித் தேர்தல் களம் தற்போது சூடு பிடித்துள்ள நிலையில் இலங்கை கிரிக்கெட் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார போட்டியிடலாமென கூறப்பட்டது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அரசியல் அவதானிகள் பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று தமிழ் பத்திரிகையொன்றில் “2020 ஜனாதிபதி தேர்தல் களத்தில்” என்ற பகுதியின் கீழ் ஒரு கட்டுரையொன்று எழுதப்பட்டிருந்தது.

குறித்த கட்டுரைப் பகுதியில்

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இலங்கை கிரிக்கெட் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார போட்டியிடலாமெனவும் தேர்தலுக்கான முன்னாயத்த நடவடிக்கையில் குமார சங்கக்கார ஈடுபட்டுவருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது”.

இந்நிலையில் குறித்த பத்திரிகையின் செய்திக்குறிப்பு தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் டுவிட்டரில் குமார சங்கக்காரவிடம் வினவியுள்ளார்.

இந்த நிலையில் குமார சங்ககக்கார அதற்கு பதிலளித்துள்ளார். “இது மிகவும் அருமையான கற்பனை… அத்துடன் முற்றிலும் தவறானது ” என பதிலளித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.