ஜாக்கெட் சேலை அணிந்தபடி மாணவன் தற்கொலை ! விடுதியில் நடந்தது என்ன?

0

கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள கல்லூரில் இன்ஜினியரிங் படித்து வந்த கோவை மாணவர் ஒருவன், ஜாக்கெட், சேலை அணிந்த படி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பள்ளியில் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மத்தம்பாளையத்தை சேர்ந்தவர் எபின் ராபர்ட். இவர் கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள தனியார் கல்லூரின் ஒன்றின் கல்லூரில் விடுதியில் தங்கி மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

சம்பவ நாளன்று விடுதியில் யாரும் இல்லாததை பயன்படுத்திக்கொண்டு ஜாக்கெட் சேலை அணிந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். நீண்ட நேரம் கழித்து அறைக்குள் வந்த சக மாணவர்கள், எபினின் கோலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்து கல்லூரி நிர்வகாத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பின்னர் போலீஸார் வரவழைக்கப்பட்டு, மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், எபின் நீண்ட நாட்களாகவே பெண்ணாக மாற ஆசைப்பட்டத்தாக சக மாணவர்கள் தெரிவித்தனர்.

மேலும், இந்த ஆசை நிறைவேறாத காரணத்தால் ஜாக்கெட் மற்றும் சேலை அணிந்து தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டிருக்க கூடும் என தெரியவந்துள்ளது. இருப்பினும் போலீஸார் மற்ற கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.