தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு !

0

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படவுள்ளது.

தேர்வு முடிவுகள் ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகின்றன. அரசு தேர்வுத் துறையின் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.inin ஆகிய இணையதளங்களில் அனைத்து பரீட்சார்த்திகளும் மதிப்பெண்ணை தெரிந்துகொள்ள முடியும்.

மேலும் பரீட்சார்த்திகள், பதிவு செய்த தொலைபேசி எண்ணுக்கு குறுந்தகவல் ஊடாகவும் மதிப்பெண்னை பெற்றுக்கொள்ள முடியும்.

இதேவேளை தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் 6 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை சிறப்பு துணை தேர்வு நடத்தப்படுகிறது. அதற்கு விண்ணப்பிக்கும் திகதி பின்னர் அறிவிக்கப்படுமென அரச தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் பட்டியலை நாளை காலை 9 மணி முதல் 26ஆம் திகதி வரை தங்கள் பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம்.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொது தேர்வு மார்ச் முதலாம் திகதி ஆரம்பமாகி மார்ச் 19ஆம் திகதி முடிந்தது. அதனைத் தொடர்ந்து விடைத்தாள் திருத்தம் மார்ச் 29ஆம் திகதி ஆரம்பமாகி ஏப்ரல் 10 ஆம் திகதி நிறைவு பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.