‘தர்பார்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பம் ! படங்கள் உள்ளே

0

பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் இன்று(புதன்கிழமை) காலை பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளன.

மும்பையில் பூஜையுடன் ஆரம்பமாகியுள்ள படப்பிடிப்பில், பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன், திருமதி. பிரேமா சுபாஸ்கரன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லைக்கா குழுமத்தின் பிரதி தலைவர் பிறேம் சிவச்சாமி, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், இந்தத் திரைப்படத்திற்கு தெலுங்கின் முன்னணி சண்டைக்காட்சி இயக்குநர்களான ராம் – லக்ஷ்மன் பணியாற்றவுள்ளார்கள்.

இவர்கள், ஏற்கனவே முருகதாஸ் இயக்கிய சர்கார் திரைப்படத்திற்கு சண்டைக் காட்சிகளை வடிவமைத்திருந்தனர். அத்தோடு, தளபதி திரைப்படத்திற்கு பிறகு சந்தோஷ் சிவன் ரஜினியுடன் கைக்கோர்க்கவுள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 167ஆவது திரைப்படத்திற்கு ‘தர்பார்’ என பெயரிப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ள Tagline அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

‘நான் நல்லவனாக இருக்க வேண்டுமா அல்லது கெட்டவனாக இருக்க வேண்டுமா என்பதை நீயே தீர்மானித்துக்கொள்’ (you decide you want me to be good bad or worse) என்பதுதான் இத்திரைப்படத்தின் Tagline .

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவரவுள்ள இத்திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளதுடன், அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கின்றார்.

பிரம்மாண்ட வெற்றிப்படமான 2.Oவைத் தொடர்ந்து ரஜினிகாந்த் மீண்டும் லைக்கா புரடக்ஷன்ஸுடன் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.