தளபதி-63யில் யோகி பாபுவை இணைத்ததற்கு இது தான் காரணமா? வெளியான உண்மை தகவல்

0

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி-63. கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வரும் நிலையில் இப்படத்திற்காக பிரமாண்ட கால்பந்து ஸ்டேடியம் செட் போடப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. இதன் வீடியோக்கள் கூட சமீபத்தில் வெளியாகி பயங்கர வைரல் ஆனது.

இந்நிலையில் இப்படத்தில் காமெடி நடிகர் யோகிபாபுவை இணைத்ததற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு காமெடி நடிகர் கொடிக்கட்டி பறப்பது போல தற்சமயம் யோகிபாபு மேல் உயர பறந்தாலும் யோகிபாபு சினிமாவிற்கு வருவதற்கு முன் ஃபுட்பால் பிளேயராக இருந்தவர் என்றும் தற்போதும் கால்பந்தாட்டத்தில் அவர் கெட்டிக்காரர் என்பதும் தான் அவரை தளபதி-63யில் இணைத்ததற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

மேலும் இப்படத்தில் விஜய் மட்டுமே கால்பந்து பயிற்சியாளராக இல்லாமல் விவேக், யோகிபாபு போன்றோரும் விஜய்யின் உதவி பயிற்சியாளராக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.