தெலுங்கு, தமிழ் மக்கள் உறவு அண்ணன், தம்பி உறவு போன்றது: சந்திரபாபு நாயுடு!

0

சென்னை வந்துள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, திமுக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். மேலும் திமுக சார்பில் போட்டியிடும் தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதி மாறன் உள்ளிட்டோரும் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தெலுங்கு, தமிழ் மக்கள் உறவு அண்ணன், தம்பி உறவு போன்றது என கூறியுள்ளார். தமிழகத்தில் மோடி ஆட்சி தான் நடப்பதாக குற்றஞ்சாட்டிய அவர், அதிமுகவுக்கு ஒரு ஓட்டு போட்டாலும் அது மோடிக்கு தான் செல்லும் என கூறியுள்ளார். 

மேலும் பேசிய அவர், ‘தமிழக விவசாயிகளின் போராட்டத்தை பிரதமர் மோடி கண்டு கொள்ளவில்லை. கருணாநிதியின் மறைவுக்கு பிறகு அவரது மகன் ஸ்டாலினை முதல்வராக பார்க்க மக்கள் விரும்புகிறார்கள். தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கவே சென்னை வந்துள்ளேன். வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடக்கிறது. விவிபேட் கருவியில் ஒப்புகைச்சீட்டு பார்க்க 7 நொடிகள் இருந்த நேரத்தை 3 நொடிகளாக மாற்றியுள்ளனர்’ என கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.