நாடாளுமன்ற தேர்தலில் கமலுக்கு ஆதரவாக களமிறங்கவுள்ள ரஜினி?; தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு!

0

ரஜினி எனக்கு ஆதரவு தருவதாக சொன்னார் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போதே கமல்ஹாசன் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த பேட்டியில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

நான் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் போது எல்லாம் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்று தெளிவாகத் தெரிகிறது. நான் போகுமிடம் எல்லாம் மக்களின் அன்பில் நீந்த வாய்ப்பு கிடைக்கிறது. அது எனக்கும், மக்களுக்கும் சந்தோ‌ஷமாக இருக்கிறது. இதனால் எங்களுக்கு பொறுப்பு கடமையும் அதிகமாக இருக்கிறது என்ற உணர்வு ஏற்படுகிறது. அதை மக்கள் எங்களிடம் எதிர்பார்க்கிறார்கள்.

தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் கோடிக்கணக்கில் பணம் பிடிக்கப்பட்டு வருகிறது. இதைப்போல செய்திகள் தினமும் கேட்பதால் சாதாரணமாகி விட்டது. இது சாதாரணமான செய்தி கிடையாது.

திராவிடம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. திராவிடம் என்பது ஒரு இனம். நான் திராவிடன், நாம் எல்லோரும் திராவிடர்கள். இந்த இரு கட்சிகள் தங்களுக்கு என்று பகிர்ந்து எடுத்துக்கொண்ட வி‌ஷயம் திராவிடம் அல்ல, எல்லோருக்கும் சொந்தமான வி‌ஷயம்தான் திராவிடம். அப்படி தான் திராவிட கட்சிகளில் உள்ள நல்ல திட்டங்களை நாங்கள் எடுத்திருக்கிறோம்.

நல்ல திட்டங்கள் எங்கு இருந்தாலும், யார் செய்திருந்தாலும் அதை மீண்டும் மேம்படுத்தி மக்களுக்கு தர மக்கள் நீதி மய்யம் முயற்சி செய்யும்.

ரஜினி என்னிடத்தில் பேசும்போது எனக்கு ஆதரவு தருவதாக சொன்னார். எனக்கு ஆதரவு தரக்கோரி திருப்பி திருப்பி அவரிடம் வலியுறுத்த முடியாது. எனக்கு ஆதரவாக ரஜினி பிரசாரம் செய்வாரா என்று தெரியாது. பிரச்சாரம் செய்தால் சந்தோ‌ஷம்தான் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.