நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான காலநிலை தொடரும் ! வளிமண்டலவியல் திணைக்களம்

0

நாட்டில் ஒருசில பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் மழையுடனான காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மத்திய, சப்ரகமுவ, தென் ஊவா, வடமேல், மேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சப்ரகமுவ, மத்திய, ஊவா, மற்றும் தென் மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ. அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த பிரதேசங்களில் பலத்த மின்னல் தாக்கத்திற்கும் சாத்தியம் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் மழை காரணமாக மலையக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். காற்றுடன் கூடிய அடைமழை காரணமாக மக்களின் குடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளனை. இதனால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை சூரியனின் வடக்கு திசை நோக்கிய தொடர்பான இயக்கத்தின் காரணமாக மதவாச்சி, பாளுகெட்டுவெவ, ஹொரவப்பொத்தானை மற்றும் சீனன்குடா ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.10 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக விளிமண்டளவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.