நாயை காப்பாற்ற தனது உயிரை விட்ட நபர் ! இலங்கையில் நடந்த சோக சம்பவம்

0

வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பண்டாரகம, ஜனஹித மாவத்தை பகுதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

முச்சக்கரவண்டி ஓட்டுனர் ஒருவர் பாதையில் சென்ற நாயை காப்பற்ற முயற்சித்த போது எதிரில் வந்த வேனுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கரவண்டி ஓட்டுனர் மற்றும் அவரது மனைவி ஆகியோர். பண்டாரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முச்சக்கரவண்டி ஓட்டுனர் உயிரிழந்துள்ளார்.

பாணந்துரை பகுதியை சேர்ந்த 63 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த பெண் பாணந்துரை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் குறித்த வேன் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.