நீர்கொழும்பு பகுதியில் பாகிஸ்தான் நாட்டவர் 6 பேர் கைது

0

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியமுல்லை பிரதேசத்தில் வைத்து 24 வயதுடைய பாகிஸ்தானியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் குடிவரவு குடியல்வு சட்டத்தை மீறி வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்துள்ளதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இதேவேளை, நீர்கொழும்பில் வேறு இடங்களில் வீசாக் காலம் முடிவடைந்த பின்னர் சட்டவிரோதமாக தங்கியிருந்த 5 பாகிஸ்தானியர்களும் நேற்று (22) நண்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 18, 23, 25 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.