பல கனவுகளுடன் திருமண பந்தத்தில் இணைந்த 24 வயது தமிழ் பெண்ணுக்கு 6 நாட்களில் நேர்ந்த சோகம்!

0

திருமணமான 6 நாளில் புதுப்பெண் மர்மமான முறையில் இறந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் மதுரையில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும்,

தமிழகம் மதுரை மாவட்டம் எம்.வல்லாளப்பட்டியை சேர்ந்த ராஜலட்சுமி (வயது24). என்பவருக்கும் வீரபாண்டி (27) என்பவருக்கும் கடந்த 10-ந்தேதி திருமணம் நடைபெற்றது.

திருமணத்தற்கு பின் புதுப்பெண் ராஜலட்சுமி எதிர்கால சந்தோஷங்களுடன் கணவர் வீட்டுக்கு சென்றார்.

இந்த நிலையில் நேற்று ராஜலட்சுமியை அழைத்துக் கொண்டு வீரபாண்டி வல்லாளப்பட்டி வந்தார். அங்கு மாமனார் வீட்டில் மனைவியை விட்டு சென்று விட்டார். அவர் சென்ற சிறிது நேரத்தில் ராஜலட்சுமி வாயில் நுரைதள்ளியபடி மயங்கி விழுந்தார். இதனால் பெற்றோர் பதட்டம் அடைந்தனர்.

மகளை உடனடியாக வைத்தியசாலைக்கு தூக்கிச்சென்றனர். ஆனால் வழியிலேயே ராஜலட்சுமி பரிதாபமாக இறந்தார். அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி பொலிஸ் நிலையத்தில் பெண்ணின் தந்தை ஒய்யப்பன் புகார் செய்துள்ளார். அதில், தனது மகள் சாவில் மர்மம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மர்மமாக இறந்த ராஜலட்சுமி உடல் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.