பாக்கிஸ்தானில் பழைமைவாத விதிகளை தகர்த்து சாதிக்கும் இளம் பாடகி!

0

ஸானா தாஜிக் இவர் பாகிஸ்தானில் சவால்களையும், வரையறைகளையும் தாண்டி சாதிக்கத் துடிக்கும் ஒரு இளம் பாடகி. 20 வயதான இந்த திறமை மிகுந்த பெண் பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்காவா மாகாணத்தைச் சேர்ந்த டிர் என்ற ஊரைச் சேர்ந்தவராவார்.

அங்கு பெண்கள் வௌியுலகில் சாதிப்பதற்கும் இசைத்துறையில் மிளிர்வதற்கும் பாரிய சவால்கள் உள்ளன. நம்மூர்களைப் போன்று ஆண்களுக்கு நிகராக பெண்களும் தங்களின் பங்களிப்பை வழங்குவது பெரும் கடினமாக விடயமாக உள்ளது.

அது பெரும் பழைமைவாத கொண்ட மக்களும், பழங்குடியினரும் வசித்து வரும் பிராந்தியமாக உள்ளது. எனினும், நவீன உலகின் சில மாற்றங்களும் அங்கு ஏற்பட்டு வருகின்றன. அந்த சூழ்நிலையில் ஒரு பெண் இசைத்துறையில் சாதிப்பதென்பது கடும் சவால் நிறைந்த சாதனையாகவுள்ளது.

ஸானா தாஜிக் தனது நண்பர்கள் குழாமுடன் இணைந்து பல இசை வடிவங்களை வௌியிட்டு பாகிஸ்தான் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கடந்த 2008 – 2009 ஆம் ஆண்டுகளில் தாலிபான்கள் பிடியிலிருந்த கீழ் டிர் பகுதியிலேயே இந்த பாடகி வசித்து வருகின்றார். அருகி வரும் பஸ்டோ மொழியில் பாடல்களை பாடி அசத்துகிறார். இந்த மொழி ஆப்கானிஸ்தானின் தேசிய மொழியாகவுள்ளது.

குறிப்பாக அங்கு கலை நிகழ்ச்சிகள் பரவலாக இஸ்லாமிய முறைமையற்றதாகக் கருதப்பட்டன. அத்துடன் பெண்கள் பொதுவௌியில் கலைநிகழ்ச்சிகளில் ஈடுபடுவதையும், பாடுவதையும் பெரும்பாலானவர்கள் விரும்புவதில்லை, அத்துடன் பெண் கலைஞர்களுக்கு எதிரான வன்முறைகளையும் தூண்டிவிடும் துர்பாக்கிய நிலையும் உள்ளது.

எவ்வாறாயினும், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவரது பெற்றோர், மூதாதையரின் கிராமமான பெஷாவரில் இருந்து வௌியேறினர். இதனையடுத்து ஸானா தாஜிக் தனது குழந்தைப் பருவ கனவை நிறைவேற்றிக் கொள்வதற்காக அவரது பெற்றோரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.

தனது பெற்றோர் முதலில் இதற்கு எதிர்ப்பினை வௌியிட்டதாகவும், பின்னர் தனது காணொளிகளையும், இசை வடிவங்களையும் பார்த்த பின் சாதாரண மனநிலைக்கு வந்ததாக ஸானா ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் அவர் தனது இசை காணொளிகளை சமூக ஊடகங்களின் மூலமாக பிரபலமடையச் செய்தார். தற்போது அவருக்கு பெருந்திரளான இளம் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.

Leave A Reply

Your email address will not be published.